முகப்பு » வாழ்க்கை வரலாறு » சத்யஜித் ரே – வாழ்வும் வழியும்

சத்யஜித் ரே – வாழ்வும் வழியும்

விலைரூ.160

ஆசிரியர் : வீ.பா.கணேசன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்திய சினிமா உலகின் அசைக்க முடியாத மனிதர் பிதாமகன், பால்கே. வங்கத்து மக்களின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியத்தின் மூலம் சினிமா என்ற சொல்லால் இந்திய மக்களின் கவனத்தை தன்னகத்தே வைத்துக் கொண்டவர் என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில் இந்திய சினிமாவில் சத்யஜித் ரேவும் குறிப்பிடத்தக்க மனிதராக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
தடைபட்ட பயணம் என்ற தான் எழுதிய கதைக்கு திரைக்கதையை  எழுதி, அதைத் திரைப்படமாக  எடுத்து, இந்தியாவிலேயே  முதன் முறையாக சினிமா ஸ்டூடியோக்களின் பக்கமே போகாமல், முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பிலேயே  தன் முதல் படமான பத்தேர் பாஞ்சாலியை உருவாக்கி, இந்தியத் திரை உலகத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்தவர் சத்யஜித் ரே.
ரவீந்திரநாத் தாகூர் துவக்கிய சாந்தி நிகேதன் பல்கலையில் கல்வி கற்றார், சத்யஜித் ரே. படிப்பு முடிந்து, வெளியே வந்த சத்யஜித் ரே, 3 மாத காலம் படம் வரைவது, படம் பார்ப்பது என்று நாட்களை கடத்தி வந்தார்.
சிறுவயதிலேயே ஓவியத் திறமையும், இசையில் நாட்டமும் கொண்டிருந்த சத்யஜித்ரே, படிப்படியாக இதர திறமைகளையும் வளர்த்துக் கொண்டே, 34 வயதில் உலகப் புகழ் பெற்றார்.
பத்தேர் பாஞ்சாலி, அபராஜிதோ, ஜல்சா கர், ரவீந்திரநாத் தாகூர் என அவரது படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சத்யஜித் ரேவுக்கு வாழ்நாள் சாதனை விருதான ஆஸ்கார் விருது வழங்கும் நாளில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து ஆஸ்கார் விருது பற்றிய அவரது உரை, விருது வழங்கும் இடத்தில் திரையில் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலைத் துறையில் ஆர்வம் உள்ள அனைவரது கைகளிலும் தவழ வேண்டிய அற்புதமான நுால் இது என்றால் மிகையாகாது.
முனைவர் க.சங்கர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us