AN UNLIKELY CHEMISTRY

விலைரூ.295

ஆசிரியர் : டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி

வெளியீடு: ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
  சுய சரிதம் பல படித்திருக்கிறோம்; ஆனால் தன் மனைவியின் வரலாற்றைத் தனது சுயசரிதமாக எழுதி இருப்பவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே; திரை உலகின் பிதாமகனாக போற்றப்படும்  டைரக்டர் சுப்ரமணியத்தின் மகனான இவர், தன் வாழ்வின் முக்கிய தருணங்களில் தன் மனைவி மோகனா எந்த அளவுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் என்பதை இந்த சுய சரிதத்தில் விளக்கி இருக்கிறார்; ராமாயணம் என்பது ராமரின் கதை என்பது எந்த அளவு சரியோ, அந்த அளவிற்கு சீதையின் கதை என்பதும் சரியே என்று வால்மீகி கூறியிருக்கிறார்; அதுபோல் மோகனாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன் சுயசரிதமாக கிருஷ்ணசாமி குறிப்பிடுகிறார்.

நியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை பயின்ற இவர், இந்தியாவின் 5 ஆயிரம் ஆண்டு கால கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும், " இந்து சமவெளி முதல் இந்திரா " வரை என்ற படத்தைத் தயாரித்தார்; இந்த படம் உலக அளவில் பெரும் புகழ் பெற்று ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வாங்கிய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது; இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் இந்த படம் வந்ததால் பெரும் அரசியல் சர்ச்சைக்குள்ளானது.
இந்திய சினிமா மற்றும் சில இந்திய முன்னணி சினிமா பிரபலங்கள் தொடர்பாக அவர் எழுதி உள்ள புத்தகத்தை கொலம்பியா பல்கலைக்கழகமும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும் வெளியிட்டுள்ளன; தமிழகத்தின் தற்போதைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் சில உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக தொலைக்காட்சி தொடர்களையும் எடுத்துள்ளார்.

தாய் மீது பாசம், தந்தை மீது மரியாதை, மனைவியுடன் சரியான புரிந்துணர்வோடு மனிதாபிமனத்துடனான அன்பு ஆகியவற்றை ஆசிரியர் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்; தற்கால இளைஞர்கள் அனைவரும் இந்த நூலைப் படிப்பது மிக அவசியம் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us