முகப்பு » ஆன்மிகம் » எளிய வடிவில் கம்பராமாயணம்

எளிய வடிவில் கம்பராமாயணம்

விலைரூ.260

ஆசிரியர் : கே.மாரியப்பன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கம்பரின் ராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும், கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு.
‘ராமன் தன் கதை அடைவுடன் கேட்பவர் அமர் ஆவரே’ ராமாயணம் இந்த மண்ணின் கதை, இதைப் படிப்பவர்கள் மனத்தில் ராமன் கூறிய நெறிகள் வேர்விட இறையருள் கிட்டும்.
எளிய வடிவில் கம்பராமாயணம் என்ற நுாலில் பூமியின் அழகுக் காட்சி என்ற பகுதியில் பூமியின் அழகை மிகவும் சிறப்பாக வர்ணனை செய்துள்ளார்.
இந்த இன்பமயமான பூமியின் காட்சியே கடவுளின் தோற்றம், துன்பத்தை நீக்கி இன்பத்தை அடையுங்கள்.
ராமாயணத்தில் ராமர், சீதை, இலக்குமணன் இவர்கள் எவ்வளவோ துன்பத்தை அடைந்தாலும், பூமியின் அழகைக் கண்டு இன்புறுகின்றனர்.
வால்மீகி முனிவர் பற்றிய கருத்தின் மூலம் நாம் செய்யும் நற்காரியங்கள் பற்றியும், பாதகத்தால் விளையும் பாவம் பற்றியும், ‘ராம’ என்னும் மந்திரத்தின் மகிமை பற்றியும் அழகாக விவரித்துள்ளார்.
கம்பனின் சிறப்பையும், கம்பன் மகன் அம்பிகாபதிக்கும், சோழ மன்னன் அமராவதிக்கும் இருந்த உறவையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
மேலும் ராமாயணக் கதையும், கிராம மக்களின் பக்திச் செயல்பாடுகளும், பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைகள் முற்றிலும் அழிந்து வருகிறது என்பதையும் குறிப்பிடுகிறார் நுாலாசிரியர்.
பால காண்ட நிகழ்வுப் பகுதியில் குழந்தையின் பெருமையையும், குழந்தையின்மைப் பற்றியும் ஆசிரியர் சிறப்பாக எடுத்தியம்புகிறார்.  
சீதையின் சிறப்பு, சீதையை ராமர் மணம் முடித்தல், உட்பட அனைத்தையும், கம்பராமாணத்தின் வழி நின்று மிகவும் எளிமையாகப் படைத்து உள்ளார்.
அந்த வகையில் எளிய வடிவில் கம்பராமாயணம் என்ற நுால் மிகவும் வரவேற்கத்தக்கது.   தமிழ்த்தாய் இதை உவகையோடு ஏற்று மகிழ்வாள் என்பதில் ஐயமில்லை.
இரா. பன்னிருகைவடிவேலன்

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us