முகப்பு » அரசியல் » அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்

விலைரூ.120

ஆசிரியர் : மகாராசன்

வெளியீடு: ஆதி பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அரசியல் என்னும் சொல்லுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமுதாய மறுமலர்ச்சியை முன்னெடுத்த அயோத்திதாசர் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். நீலகிரியில் திராவிட மகாஜன சபை என்னும் அமைப்பைத் துவங்கி, சமுதாய எழுச்சிக்கு வித்திட்ட விபரம் பதிவாகியுள்ளது.

ஒரு பைசாத் தமிழன் என்னும் பத்திரிகை, அயோத்தி தாசரின் அடையாளங்களில் ஒன்று. இந்தப் பத்திரிகை துவங்கும் அனுபவத்தை, திராவிடப் பாண்டியன் என்னும் இதழ் மூலம் பெற்றுள்ளார். அதில் தான் இதழியல் நுட்பங்களைக் கற்றுள்ளார்.

குலம், வருணம் முதலான போக்குகள் குறித்த அழுத்தமான சிந்தனையை  வெளிப்படுத்தியுள்ளார். அயோத்திதாசர் கருத்துக்களை யாரும் முன் எடுக்காமல் இருந்ததற்கான காரணத்தையும், அவரது சிந்தனைத் தெளிவையும் ஆய்வு நோக்கில் அணுகி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்திதாசரின் ஆளுமையை அறிந்து கொள்ள உதவும் கண்ணாடி இந்த நுால்.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us