முகப்பு » ஜோதிடம் » சிற்ப சாஸ்திரக் கண்ணாடி

சிற்ப சாஸ்திரக் கண்ணாடி

விலைரூ.300

ஆசிரியர் : வை.பா.அரங்கசாமி

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கோவில் மற்றும் வீடுகள் கட்டும் முறைகள் குறித்து விளக்கும் நுால். சிற்ப சாஸ்திரியின் லட்சணமும், இடைக்காட்டார் அருளிச் செய்த 60 ஆண்டுகளின் பலன்களும் கூறப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் வாசல்கள் கட்ட வேண்டிய மாதங்களும், சூல திசைகளின் குறிப்பும் தரப்பட்டு உள்ளது.

எதிர்க் குத்து மனைகளுக்கு நிவர்த்தி விபரமும், வாஸ்து தேவன் குறித்த விளக்கங்களும், ஆலயம்,  மனைகளுக்கு வைக்கக்கூடாத மரங்களின் விபரங்களும் தரப்பட்டுள்ளன. ஆலயம், மனைகள் கட்ட, காட்டில் மரங்கள் வெட்டும் விதியும், வெட்டும் முறைகளும், வருணன், வாயு, குபேரன் திசைகளின் பலன்களும் தரப்பட்டுள்ளன.

முகூர்த்தத் தேங்காய் உடைக்கும் விதம், கோவில் மனைகளின் அடி அளவுகள் குறித்த பலன்கள், கதவுகளின் சப்த லட்சணங்களின் விபரங்களும் கூறப்பட்டுள்ளன. கோவில், தனி வீடு கட்டுவோருக்குப் பயன்படும் நுால்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us