முகப்பு » ஆன்மிகம் » விசேஷம் இது வித்தியாசம் (பாகம் – 2)

விசேஷம் இது வித்தியாசம் (பாகம் – 2)

விலைரூ.180

ஆசிரியர் : தி.செல்லப்பா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
விசேஷமான, வித்தியாசமான, புதுமையான தமிழக கோவில்கள் பற்றி தெளிவாக உரைக்கும் நுால். உதாரணமாக, பத்திரமாக வீடு திரும்ப வேண்டுவோருக்கு காவலாக இருக்கிறார், திருச்சி தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் பிள்ளைத்திருநறையூர் அரையர். ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா வாசல்கள், என எல்லாம் ஏழு ஏழாக அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ள இடம் கிருஷ்ணகிரி சூளகிரி.

பாபநாசர் கோவில் உலகம்மன் சன்னிதி முன் திருமணங்களில், அம்பாளே மணமகளுக்கு நாத்தனாராக இரண்டாவது, மூன்றாவது முடிச்சை இட்டு நடத்தி வைப்பதாக ஐதீகம். கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு, பக்தர் ஒருவர் பிச்சை எடுத்து திருப்பணி செய்துள்ளார். இப்படி சுவையான விஷயங்களை கொண்டுள்ள நுால். ஆன்மிகவாதிகளுக்கும், பிரசாரகர்களுக்கும் வரப்பிரசாதம்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us