முகப்பு » வரலாறு » தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்

விலைரூ.550

ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு

வெளியீடு: மாவட்ட நிர்வாகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வெளி உலகம் அறியாத தியாகிகள் குறித்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். துாத்துக்குடி மாவட்ட பகுதியில் நடந்த போராட்ட வரலாற்றுச் சுவடுகளை கண் முன் நிறுத்துகிறது.

மாவட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் துவங்குகிறது. அங்கு நடந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தொகுத்து சம்பவங்களுடன் விவரிக்கிறது. அறியப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் என, 12 பேரையும், அறியப்படாத வீரர்கள் என பலரையும் அறிமுகம் செய்கிறது. உரிய ஆதாரங்களை திரட்டி பதிவு செய்துள்ளது.

தியாகிகள் பட்டியலில் இடம் பெறாதவர்களையும், குறிப்பிட்ட ஒரு பகுதியில் அதிகம் பேர் போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்ததையும் வரலாற்றுப்பூர்வமாக தெளிவாக உரைக்கிறது. இறுதியில் புகைப்பட ஆல்பம் ஒன்றும் உள்ளது. வட்டார அளவில் சுதந்திரப் போராட்டத்தின் உண்மையை விவரிக்கும் நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us