முகப்பு » கட்டுரைகள் » தமிழரின் மரபுச் செல்வங்கள்

தமிழரின் மரபுச் செல்வங்கள்

விலைரூ.90

ஆசிரியர் : முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
அறிவியல், தொழில்நுட்பம் பாகம்-1 மற்றும் 2 ஆங்கிலம் - தமிழ் : பதிப்பாசிரியர்: முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி. உதவிப் பதிப்பாசிரியர் முனைவர் தி.மகாலட்சுமி. வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

இந்த இரு அரிய தமிழ் பொக்கிஷங்களில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழர் பண்டைக் காலத்திலேயே எவ்வாறு சிறந்த ஆற்றலையும் அறிவையும் பெற்றிருந்தனர் என்பதையும் மற்றும் இவை எப்படி தமிழரின் வாழ்க்கை, மரபு, கலாசாரத்துடன் ஒன்றி இருந்தது என்பதையும் கட்டுரைகள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவற்றைத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை இரு பாகங்களாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.

தமிழில் அறிவியல் என்று தமிழக அரசு எல்லா பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்துள்ள இக்காலக் கட்டத்தில் எல்லா கல்லூரிகளிலும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உள்ள நூலகங்களில் இவ்விரு பாகங்களும் கொண்ட நூல் இருப்பது அவசியம். முனைவர் முத்துக்குமரன் தனது முக்கிய உரையில் தொன்மை மிகுந்த தமிழில், எப்படி சூன்யம் மற்றும் எண்கள், அளவிடுதல், நீரின் முக்கியத்துவம் மற்றும் சேகரிப்பு, மழையின் முக்கியத்துவம், விவசாயம், கட்டடக் கலை, புவியியல், கடல் வழிக் கலங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் முதலியவை அறியப்பட்டிருந்தன என்பதை எடுத்துரைத்துள்ளது நூலின் அணிகலமாக விளங்குகிறது.

மேலை நாட்டு நாகரிகத்தில் மூழ்கி, அதன் மூலம் தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிய முடியும் என்ற தவறான கருத்துக்கள் இன்றைய இளைஞர்களிடம் பரவலாகக் காண முடிகிறது. இக்கருத்துக்கள் எத்துணை அளவு அறியாமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது என்பதை இக்கால மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, நாட்டுப்புறப் பாடல்களிலும், வாழ்க்கை முறையிலும் நீர் இருப்பிடம் கண்டுபிடித்தல், தொலை உணர்வு போன்ற தொழில் நுட்பங்களைப் பின்னியுள்ளது முனைவர் எஸ்.வி.சுப்ரமணியம் கட்டுரையில் காணலாம். அதேபோல முனைவர் துரையரசன் கட்டுரை மூலம் உழவுத் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை காணலாம்.

மொத்தம் 62 அரிய கட்டுரைகள் அடங்கிய இவ்விரு பாகங்களும், நூல் நிலையங்கள் மட்டுமின்றி தாய்மொழி தமிழைக் கொண்டு பயின்று, இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் வாழ்ந்து வரும் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்களாகும்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us