முகப்பு » இலக்கியம் » இலக்கண அமுதம்

இலக்கண அமுதம்

விலைரூ.35

ஆசிரியர் : புலவர் தமிழமுதன்

வெளியீடு: அமுதா பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
அமுதா பதிப்பகம், அமுத இல்லம், கவியரசு கண்ணதாசன் நகர், சென்னை-5, (பக்கம்: 136.)

எழுத்துக்களின் வகைகள், மொழிக்கு முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துக்கள், சொல் வகை, பகுபதம், புணர்ச்சி வகைகள், பிழை ஏற்படும் இடங்கள், ஒற்றுமிகும் இடங்கள் உள்ளிட்டவை குறித்து 14 தலைப்புகளில் இலக்கணத்தை `கசப்பின்றி' விளக்குகிறார் நூலாசிரியர். விளக்க வரும் இலக்கண வகைகளைத் தெளிவாக, குழப்பமின்றி எடுத்துக்காட்டுகளோடு எளிமையாக விளக்கிச் செல்வது சிறப்பு. மாணவர்கள் மட்டுமின்றி தமிழார்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நல்ல நூல்.

62. குறுகிய வழி: மூலஆசிரியர்: ஆந்த்ரே ழீடு. தமிழில்: க.நா.சு., வெளியீடு: பூங்குழல் பதிப்பகம், ஏபி.1108, தென்றல் குடியிருப்பு, 3வது தெரு, மேற்கு அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 152. விலை: 70)

ஆந்த்ரே ழீடு 1947ல் நோபல் பரிசு பெற்றவர். இவரது எழுத்து நடையில், உத்திமுறையில் மயங்கிய இளைஞர்கள் பலர். 1957ல் நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் காமூ - 1964ல் நோபல் பரிசு பெற்ற ழீன் பால் சார்தரே போன்ற புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் ஆந்த்ரே ழீடுவின் எழுத்தின் பாதிப்புக்கு உள்ளானவர்களே!

இளைஞன் ஜெரோமும், அலிஸ்ஸாவும் காதலிக்கின்றனர். அலிஸ்ஸா ஒரு மதப் பிரசங்கத்தைக் கேட்கிறாள். `ஜெரோம் புனிதமான வாழ்க்கை வாழ்வதற்கு உரியவன்.

உயர்ந்த லட்சியங்களை சாதிக்கப் படைக்கப்பட்டவன். அவனைக் காதல் வாழ்க்கையில் இருந்து திருப்பி விட வேண்டும்,' என்று முடிவு எடுக்கிறாள். `என்னைக் காதலிப்பதை விடச் சிறந்த காரியத்திற்காகக் கடவுள் உன்னைப் படைத்திருக்கிறார்' என்கிறாள். இது தான் இந்த நாவலின் மகத்தான திருப்பம்.

உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழுக்குத் தந்த க.நா.சுப்ரமணியத்தின் அருமையான மொழிபெயர்ப்பு. இலக்கியப் பொக்கிஷம்!

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us