முகப்பு » ஜோதிடம் » மங்களேஸ்வரீயம்

மங்களேஸ்வரீயம்

விலைரூ.250

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர் .சென்னை.600 017. தொலைபேசி எண்: 24331510. ( பக்கம் :480 )

மங்களேஸ்வரீயம் என்ற பிருஹத்ஜாதகம் என்பது ஜோதிட கலையில் அரிய நூல். பழங்காலத்தின் பொக்கிஷம். சிவஞான ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் ஆசிரியர் கௌரிசங்கர் சிறப்பாக இந்த நூலைப் படைத்திருக்கிறார்.

ஜோதிடக் கலையில் புதிதாகக் கற்று தேர்பவர்களுக்கு அல்ல இந்த நூல். தமிழ்க்கவிதையும் ஜோதிடமும் அறிந்தால் இதன் சுவையை முழுவதும் அறியலாம். குழந்தை ஜனனம் முதல் கடைசி வரை நட்சத்திர, கிரகப்பலன்கள் அழகிய தமிழ்ப் பாடல்களாகவும், அதற்கு ஆசிரியரின் தெளிவான உரையும் இந்த நூலின் தனிச்சிறப்பு. கர்ப்பகாலம் முழுவதும் நிரம்பும் முன் பிறந்து வாழும் சிசுக்களின் கோள்நிலை மட்டும் அல்ல, பெண்கள் இருவர் கூடி இருக்கும் ( தற்போது லெஸ்பியன் என்று அழைக்கப்படுகிறது) வகையில் உள்ள கிரக அமைப்பு போன்ற அதிசயத் தகவல்கள் உண்டு. இவற்றைப் பார்க்கும் போது ஜோதிடம் மூடக் கருத்து என்பது முடங்கி விடும். இவ்வளவு பெரிய கலையை முற்றிலும் அறியாத ஜோதிடர்கள் தற்போது உலாவரும் நேரத்தில், இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இது இத்துறையில் முன்னேற விரும்புவோர்க்கு பெரிதும் வழிகாட்டும் என்பது நிச்சயம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us