முகப்பு » இலக்கியம் » தமிழில் மரியாதைச் சொற்கள்

தமிழில் மரியாதைச் சொற்கள்

விலைரூ.30

ஆசிரியர் : கவிக்கோ ஞானச்செல்வன்

வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை

மரியாதை என்னும் சொல்லின் பல வகையான பயன்பாடுகளை காட்டிவிட்டு, "நாமிங்கே நினைக்கத்தக்கது மரியாதை என்னும் சொல்லுக்கான மரியாதையான பொருளை மட்டுமே, அப்படி மரியாதை தரும் சொற்கள் தமிழில் நிரம்ப இருக்கின்றன. அவை பற்றி ஓர் ஆராய்ச்சியில் இறங்கினால், அதனால் நமக்கு கிட்டுவது தமிழின்பமே என, நூலாசிரியர் துவக்கத்தில் எழுதியிருப்பது போல், தமிழின்பம் நல்கும் நூல் இது. மாண்புமிகு என்னும் அடைமொழியை அவர்தம் பதவிக்கும் முன் சேர்க்க வேண்டும்; பெயரோடு சேர்த்தல் முறையாகாது. "மட ஜீயர் என்று எழுதாமல், "மடத்து ஜீயர் என்று அத்துச்சாரியைச் சேர்தல் வேண்டும். இறைத்தன்மை சார்ந்த பெயர்களில், நிகழ்வுகளில், "திரு சேர்த்திட வேண்டும். திருவீதி உலா, திருக்காட்சி, திருவாபரணம், திருவிளையாடல் இப்படி பல அருமையான செய்திகள் உள்ளன. நம்பி, குரிசில், அண்ணல், அடிகள், பெருமான், ஐயன், ஐயை, பிரான், பிராட்டி என்பனவும் மரியாதைச் சொற்களே என, பலவாக விரிந்து செல்கிறது. படித்து மகிழ, பயன்பெற தக்க சிறிய நூல் இது. - மூர்த்தி

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us