சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்

விலைரூ.500

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: ஷ்ரீராமகிருஷ்ண மடம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ஷ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 6,000க்கு மேல்.)

சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பண்பாட்டுப் பெருமையை, இந்து மதத்தின் ஆன்மிகச் சிறப்பை, உலக நாடுகளுக்கு எடுத்துச் சொன்ன வீரத் துறவி. இவர் சொற்பொழிவுகள் அனைத்தையும் தொகுத்து, அதை தமிழில் மொழி பெயர்த்து, நூல் வடிவில் குறைந்த விலையில் தயாரி த்து வழங்கியிருக்கின்றனர்.பதினோரு புத்தகங்களில், சுவாமிஜியின் சொற்பொழிவுகளுடன் பேட்டிகள், உரையாடல்கள், கவிதைகள், கடிதங்கள், துணுக்குகள், பத்திரிகைக் குறிப்புகள் என சகல விஷயங்களையும் தொகுத்து வழங்கியிருக்கின்றனர். சுவாமிஜியின் சிகாகோ, கொழும்பு, அல்மோரா சொற்பொழிவுகள், இந்து தர்மத்தின் நான்கு முக்கிய யோகங்களான, கர்ம, பக்தி, ராஜ, ஞான யோகங்கள் பற்றிய சுவாமிஜியின் விளக்கங்கள், படித்துப் பார்த்து அனுபவிக்க வேண்டியவை.சுவாமிஜி, இந்து மதத்தின் சிறப்பை மற்ற மதங்களுடன் ஒப்பட்டுச் சொல்லும் போதெல்லாம் எந்த அளவு கண்ணியத்தைக் கையாண்டிருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறையினர் அவசியம் படித்துப் பார்த்து தெரி ந்து கொள்ள வேண்டும்.
சுவாமிஜி சமுதாய சிந்தனையுடன் ஆன்மிகம் பேசியவர். ஜாதி, அந்தஸ்து, ஏற்றத்தாழ்வு, வர்க்க பேதம் ஆகியன ஒழிக்கப்பட வேண்டும் என்பதுடன்,
மூட நம்பக்கையை எத்துணை உத்வேகத்துடன் எதிர்த்துக் குரல் எழுப்பயிருக்கிறார் என்பதை நாத்திகவாதிகள் படித்துப் பார்த்து உணர்வதின் மூ லம் இன்றைய சமூ க வாழ்வில் நல்லிணக்கமும், அமைதியும் நிலவச் செய்ய முடியும்.

முழுமையானதொரு நாகரி கத்திற்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான அருஞ்செல்வங்கள் இந்தியாவிலிருந்து வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த இனத்தின் ஈடிணையற்ற, பாரம்பரி யமான, ஆன்மிகத்திற்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் துன்பங்களையும், சீரழிவுகளையும் சந்தித்த பின்னரும் நம் நாடு நெஞ்சோடு அணைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற அந்தப் புதையலுக்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. இங்கோ நாம் வெறும் பேச்சுக்களிலும், சண்டை சச்சரவுகளிலும், புனிதமானவற்றை ஏளனம் செய்வதிலும் காலத்தை வீணடிக்கிறோம். புனிதமானவற்றைக் கேலி செய்வது என்பது ஏறக்குறைய நமது தேசிய தீமையாகவே மாறி விட்டது.

கல்வி குறித்தும், பெண்கள் முன்னேற்றம் பற்றியும் விவேகானந்தர் கூறியவற்றைப் படித்தால் போதும்; நாம் செய்ய வேண்டியது என்ன என்பது நமக்கு விளங்கிவிடும்.

ஐந்தாயிரம் ஆண்டுப் பாரம்பரி யப் பெருமையும், சிறப்பும் கொண்ட நம்முடைய வேதாந்தத் தத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்திய சுவாமி விவேகானந்தர், அவற்றை கடல் கடந்தும் கொண்டு சென்று நமது நாட்டுக்கு பெருமை சேர்த்த மகா புருஷர். எப்பொழுதும் கொடுப்பவனின் நிலையில் இரு. பிரதியாக எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் கொடு. அன்பைக் கொடு; உதவியைக் கொடு; சேவையைக் கொடு; சிறிது என்று கருதாமல், கொடுப்பதற்கென்று உன்னிடம் உள்ளவற்றை எல்லாம் கொடு.

இந்த தொகுப்பு நூல்கள் ஆன்மிகப் பெருமக்கள் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டிய அற்புதமான தொகுப்பு. ஷ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் புத்தக வெளியீட்டுத் துறையினர் மிகச் சிறப்பாக இந்த தொகுப்பை தயாரி த்துக் கொடுத்திருக்கின்றனர். தமிழ் கூறும் நல்லுலகம் இதை வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும்.

Share this:

வாசகர் கருத்து

- ,

YENAKKU PIDITHAVARGALUL ORUVAR VIVEKANANTHAR AVARUDAYA KARUTHUKKAL ANAITHUM YENNAI THELIVURASEIKINDRATHU AVAR VAZHI NADAKA NAN VIRUMBUKIREN BY PALAYAM P

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us