முகப்பு » கட்டுரைகள் » GEORGE BERNARD SHAW AND Dr.MU.VA. A COMPARATIVE STUDY

GEORGE BERNARD SHAW AND Dr.MU.VA. A COMPARATIVE STUDY (ஆங்­கில நூல்)

விலைரூ.180

ஆசிரியர் : ஏ.கே.ராமபூஷணம்

வெளியீடு: இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 176,

தமிழத் தென்றல் திரு.வி.க., மு.வ.,பற்றிப் பேசு­கையில், மு.வ., பெர்­னாட்­ஷாவை மிக ஆழமாக வாசித்து வாசித்த அவரே தமிழ்­நாட்டின் பெர்­னாட்ஷா ஆகி­விட்டார் என்று குறிப்பிட்­டி­ருக்­கிறார். இது மிகை­யல்ல,
உண்­மையே. மு.வ.,வுக்கு  ஷா மீது அவ்­வ­ளவு ஈர்ப்பு. இந்த இரு இலக்­கிய ஜாம்­ப­வான்­களுக்கும், உலகைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதைச் சீர்­தி­ருத்­தவும் வேண்டும் என்ற கருத்தில் பெருத்த உடன்­பாடு உண்டு. அதற்கு ஷா தேர்ந்­தெ­டுத்த வழி நாட­கங்கள். மு.வ. தேர்ந்­தெ­டுத்­தது நாவல்கள்.ஷாவின் கிண்­டலும், கேலியும் உலகப் புகழ் வாய்ந்­தவை. மு.வ.,வை அந்த அள­விற்கு சொல்ல முடி­யாது. ஏனென்றால், மு.வ., அடிப்­ப­டையில் மிக மென்­மை­யான மனிதர். தனது நகைச்­சு­வையால், பிறர் மனம் புண்­பட்­டு­வி­டக்­கூ­டாது
என்­பதில் கவ­ன­முள்­ளவர். ஷாவுக்கு, மிக முதிர்ந்த வயதில் தான் இயேசு கிறிஸ்­துவும், பைபிளும் மனி­த­னுக்கு மிக அவ­சியம் என்று புலப்­பட்­டது. ஆனால், மு.வ.,வுக்கோ மிக இளம் வய­தி­லேயே வாழ்க்கைக்கு மதம் மிகத் தேவை­யா­னது. வாழ்­வா­தா­ரத்­துக்கு,  கடவுள் அவ­சியம் தேவை என்ற ஞானம் வந்­து­விட்­டது. அந்த வகையில், ஷாவை மிஞ்சி விட்டார் மு.வ., என்றே சொல்­லலாம்.
மு.வ., மீது ஷாவின் தாக்கம் குறித்து, முதல் அத்­தி­யா­யத்தில் விவ­ரிக்கும் ஆசி­ரியர் அடுத்த­டுத்த அத்தியாயங்களில் இரு­வ­ரது பாத்­திரப் படைப்­புகள், பெண் பாத்­தி­ரங்கள், காதல், வறுமை, எதிர்­கா­லத்தைப் பற்­றிய கனவு முத­லி­ய­வற்றை  திறம்­பட ஆய்வு செய்­கிறார். இருவரைப் பற்­றிய பல சுவை­யான தக­வல்கள் நூலில் உண்டு. இலக்­கிய அன்­பர்கள் அவசியம் படித்து ரசிக்க வேண்­டிய நூல்.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us