முகப்பு » கதைகள் » உயில் மற்றும் பிற

உயில் மற்றும் பிற கதைகள்

விலைரூ.160

ஆசிரியர் : சுப்ரபாரதி மணியன்

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒடிய எழுத்தாளர், ஜே.பி.தாஸ், சரஸ்வதி விருது, சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றவர். 77 வயதாகும் அவர் எழுதிய, 11 சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த கதைகளின் சிறப்பே, எழுத்தாளர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவது தான். பெண்கள் பிரச்னைகள் குறித்தும் சில கதைகள் பேசுகின்றன.
அவற்றில், எழுத்தாளர்கள் பற்றிய கதைகள் சிறப்பானவை. ‘முன்னோடி’ என்று ஒரு கதை. தான் எழுதிய அருமையான நாவல், ‘டிவி’ தொடருக்காக, கன்னாபின்னாவென சிதைக்கப்படுவதை கண்டு, நாவலாசிரியர் மனம் வெதும்புகிறார். ‘கவிதையின் நீண்ட பயணம்’ என்ற மற்றொரு கதையில், கவிஞராக திறம்பட எழுதியவர், சினிமா பாடல் ஆசிரியராக மாறியதும், தரத்தில் தாழ்ந்து போகிறார். அவரின் வீழ்ச்சி, படிப்படியாக சித்தரிக்கப்படுகிறது. ஒடியாவில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு அங்கிருந்து தமிழுக்கு இந்த சிறுகதைகள் வந்தாலும், மூலத்தை படிப்பது போன்ற உணர்வை தருகிறது, சுப்ரபாரதி மணியனின் மொழிபெயர்ப்பு.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us