முகப்பு » கதைகள் » இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள்

விலைரூ.100

ஆசிரியர் : ஞா.சிவகாமி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார்.
‘பீக் ஹவர் பஸ்’ பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல  பிரச்னைகளை இந்த நாவலில், அலசுகிறார்.
இவர், தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் என்பதால், ஏழைகளின் கோரிக்கை மனுக்களை பார்த்து, உள்ளம் பதைபதைத்திருக்கிறார் என, வாழ்த்துரையில், மூத்த கம்யூ., தலைவர் நல்லகண்ணு கூறியிருக்கிறார். ‘இந்தியாவில் தொழிலாளி, தொழிலாளியாக மட்டுமல்ல; உழைப்பாளியாகவே இருந்து மடிகிறான். தொழிலாளியால், பலர் ‘முதலாளி’களாகிவிட்டனர். ஆனால் நாடு தான் இன்னும் முன்னேறியபாடில்லை’ (பக்.57,58) என்ற இவரது நெருப்பு வசனம், இவரது சிந்தனையை காட்டுகிறது. பாராட்டப்பட வேண்டிய முதல் முயற்சி.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us