முகப்பு » ஆன்மிகம் » நடராஜ தரிசனம்

நடராஜ தரிசனம்

விலைரூ.275

ஆசிரியர் : சி.எஸ்.முருகேசன்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘ஆதியும் அந்தமும்’ முதல், ‘எங்கும் சிதம்பரம்’ வரை, மொத்தம், 25 தலைப்புகள் இந்த நூலில் உள்ளன. ‘அசையாத ஐந்தெழுத்து மந்திரத்தின் அசையும் வடிவம் தான் அவர்  நடனம்’ என்ற ஆய்வுக் குறிப்பும், இறைவன் ஆடிய ஆதி நடனம் எது என்ற  கேள்விக்கு, சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையிலிருந்து மேற்கோள்  காட்டியிருப்பதும் சுவையானவை.
இறைவன் ஆடிய ஆதிக் கூத்து, மூவகை தாண்டவத்திலிருந்து,  நூற்றெட்டு தாண்டவ வகை வரை அனைத்தையும் வரிசைப்படுத்தி, படங்களோடு பல செய்திகளை,  நூலாசிரியர் பல நூற் சான்றுகளோடு விளக்கி உள்ளார். பக்கத்திற்குப் பக்கம் அரிய செய்திகளோடும், அச்செய்திகளுக்குச்  சான்றாக புகைப்படங்களையும் கொடுத்துள்ளார். மொத்தத்தில், நடராஜப் பெருமானின் தாண்டவ  ரகசியங்களை நிறைவாக விளக்கிக் காட்டும் ஆழமான பதிவுகள். ஆன்மிக  அன்பர்களுக்கு ஒரு ஞானப் புதையல்.
குமரய்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us