முகப்பு » ஜோதிடம் » கடலங்குடியின்

கடலங்குடியின் காலப்பிரகாசிகை

விலைரூ.200

ஆசிரியர் : டாக்டர். கே.என். சரஸ்வதி

வெளியீடு:

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு. தி.நகர். சென்னை.600 017, (பக்கம்: 424: விலை: ரூ.200)

ஒரு செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும், காலத்தைப் பிரகாசம் செய்து நன்மைதரும் வழிகளைக் கூறும் நூல் இது. அப்படி ஆனால் புதிய ஆடை, ஆபரணம் அணிவது, பயணம் மேற்கொள்வது, வைத்தியம் செய்யத் துவங்கும் போது இப்படி எல்லா விஷயங்களுக்கும் நேரத்தைத் தயார் செய்து வைக்க வழிகாட்டும் வகையில் எளிமையாகப் படைக்கப்பட்டிருக்கிறது. முழுவதும் சோதிடம் அல்ல, ஆனால் இன்றையத் தேவையை நட்சத்திரங்களின் பலன் கொண்டு சாதகமாக்கிட வழிகூறும் நூல்.

குழந்தை பிறப்பு நேரம், சில யோகங்கள் பற்றிய குறிப்புகளும் இதில் உள்ளன. ஆண்குழந்தை, பெண்குழந்தை பிறக்க எது சரியான காலம், கட்டிய வீடு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்க, ஏன் ஆயிரம்வருடங்கள் கூட நீடிக்க அஸ்திவாரம் தோண்டும் நேரம் எப்படித் தேர்வு செய்வது என்ற விவரமும் உள்ளது.

நோயாளிகள் பாதிப்பில் இருந்து மீண்டு குளிக்க ஏற்ற நட்சத்திரம், நாட்கள், எண்ணெய் ஸ்நானம் செய்ய ஏற்ற திதிகள், கனவின் பலன்கள் என்று பல விஷயங்கள் சிறப்பாகத் தரப்பட்டிருக்கின்றன. தலைப்பிற்கேற்ப, நாள் நிர்வாகத்தில் எந்த அளவு நட்சத்திரங்களின் துணைகொண்டு எல்லாவற்றிலும் வெற்றி காணலாம் என்னும் கருத்தில் பல விஷயங்கள் தெளிவுபடக் கூறப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பு. அதற்காக நூலாசிரியரைப் பாராட்டலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us