Advertisement

ஆல்பா மைண்ட் பவர்

₹ 60

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆழ்மனதின் ஆற்றலை உணர்ந்து பயன்படுத்தி, வாழ்வில் வளம் பெற அறிவுறுத்தும் நுால். துாக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையிலான நிலையில் மூளை செயல்பாட்டை அறியத் தருகிறது. தியானம் என்ற ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படும் நிலையை விவரிக்கிறது. தியானப்பயிற்சி செய்தால் நினைவாற்றல் கூடும் என்கிறது. எண்ணம் என்பது கணினி மென்பொருள் போன்றது என அறிவுறுத்துகிறது. எதிர்மறை எண்ணம் கொண்டோருக்கு வெற்றி கிடைக்காது என்கிறது. கெட்ட எண்ணத்தால் ஏற்படும் முட்டுக்கட்டையை நீக்க வழி சொல்கிறது. தியானப் பயிற்சியால் பயனடைந்தோர் அனுபவங்களும் உள்ளன. சுய முன்னேற்றத்துக்கு உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்