சமூகத்தை உற்று நோக்கி படைக்கப் பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதலில், ‘வெட்டக்கூடாது என்பது எப்போது புரியும் மர மண்டைகளுக்கு’ என, காடு அழிப்பை சாடுகிறது. லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் கண்டிக்க, ‘இரவு வாகனச் சோதனை... ஊதுகிறான் நோட்டை, அணைக்கிறது அதிகாரம்’ என, நுட்பமாக பதிவு...