காதல், வீரம், சோகம், பழம் பெருமை, எதிர்கால நம்பிக்கை என்று எட்டு சீர் விருத்தப்பாக்களால் அமைந்த நுால். பாடல்கள் வழியாக கருத்துகள் கொட்டப்பட்டுள்ளன. ஓசைநயம் தான் பாடல்களின் உயிர் மூச்சு. அது நிறைய கைவந்திருப்பதை, ‘ஒவ்வொரு நாளும் பொய்கள் சொல்லி மக்களுக்கே வைப்பார் கொள்ளி’ என அரசியல் அறத்தை பாடி...