பிரசித்தி பெற்ற காவியமான சாகுந்தலம் நாவல் வடிவில் அமைந்த நுால். சமஸ்கிருதத்தில் உள்ள காளிதாசரின் அபிஞான சாகுந்தலம் நாடகம், நாவலாக விரிந்து வியப்பை தருகிறது. காதல், பிரிவு, சாபம், ஏமாற்றம், தியாகம் என, உணர்வுகளின் பரிமாணங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது. மொழிகளை கடந்து காவியச் சுவை சிறிதும் குன்றாமல்...