வேதமுதல்வன் விநாயகப் பெருமான். வினை தீர்க்கும் வித்தகன் வல்லப கணபதி. பிரணவத்தின் மறுபதிப்பாக வீற்றிருப்பவன் மகா கணபதி. மகா கணபதியின் ஆராதனையும், உபாசனையும் இந்த மண்ணுலகிற்கு மிக மிகப் பழமையானது. `ஓம் என்பது பிரணவ மந்திரம். அதன் நாத தத்துவத்தை சிறு கோடாக எழுதி, பிந்து தத்துவத்தைப் புள்ளியாக அதன்...