பிரமிக்க வைக்கும் அற்புத அறிவியல் குறித்த நூல். அற்ப கேள்விகள் என்று நாம் ஒதுக்கும் விஷயங்கள் தான் அறிவியலின் ஆதாரம் என்ற சுவாரஸ்யமான கருதுகோளில் இருந்து ஆரம்பிக்கிறது, ‘ஜீன் ஆச்சர்யம்’. கிரேக்க சிந்தனையாளன் பிதாகரசின் விநோதமான கேள்வியில் துவங்கும் மரபணு ஆராய்ச்சியின் வரலாறு, அரிஸ்டாட்டிலின்...