மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு எத்தனை விளக்கவுரைகள் வந்தாலும் அத்தனையும் ஏற்றமுடையதாகவே உள்ளன. இதற்குக் காரணம் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டுப் பலரும் அக்கடலில் மூழ்கி முத்தெடுக்கின்றனர். இந்நூலும் அத்தகு சிறப்புடையதாக விளங்குகிறது.வைணவம் ஜாதி சமய வேறுபாடற்றது...