தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகளை விளக்கும் நுால். அன்பே வாழ்வின் அடிப்படை என்பதை குறள் வழி விளக்குகிறது. உழைப்பின் மேன்மையை, ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்ற குறுந்தொகை பாடல் வழியாக பதிவு செய்துள்ளது. அந்த பாடலில் அமைந்த இல்லற மேன்மையை எடுத்து சொல்கிறது. ஒழுக்கத்தை விட சிறந்தது...