அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதிக்கு பதவுரை, பொருளுரை கூறும் நுால். பாடலில் சொற்கள் அமைந்த வரிசையிலே பதவுரை தந்துள்ளது, எளிதாக பொருள் உணர உதவும். கந்தன் என்ற சொல்லிற்கு பகைவர் ஆற்றலை வற்றச் செய்பவன்; ஆறுருவும் ஒன்றாய் இணைந்தவன்; ஆன்மாக்களுக்கு பற்றுக் கோடாய் திகழ்பவன் என்று கூறுகிறது. அநுபூதி...