மீனவ கிராமத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். வேறுபாடுகள் இன்றி சிறுவர்கள் கடற்கரை மணலில் ஆடி, ஓடி, பாடி, விளையாடி மகிழ்ந்திருந்ததை வெள்ளை உள்ளமாக காட்டுகிறது. பிஞ்சு மனங்களில் ஜாதி ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு போன்ற நச்சுச்செடி எவ்வாறு வேரூன்றப்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறது....