புறநானூறு, பழந்தமிழ்ப் புலவர் பல நூறு பேர், பல்வேறுபட்ட பாடு பொருட்கள் பற்றிப் புனைந்துள்ள தொகுப்பு நூலாகும். ஊர், பேர் தெரியாத புலவர்களின் அருமை பெருமைகளைக் காலா காலத்துக்கும் காட்டவல்ல, கவிமலர்கள் கொண்ட தொகுப்பே புறநானூறு. நூறு தலைமுறைகள், கடந்த நிலையிலும் பழந்தமிழ் நாட்டையும், அக்கால மக்கள்...