‘தினமலர்’ வாரமலர் உள்ளிட்ட இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, பேச்சு துணைக்கு ஏங்கும் பெண் பற்றியது. மனதில் ஒளிவு மறைவு வைக்காமல் பேசுகிறது. அருகில் உள்ளோர் அந்த பெண்ணை காயப்படுத்துகின்றனர். இந்த கதையை படித்தவுடன், கலகலவென பேசுவோரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது....