இந்தியாவின் பாரம்பரிய குரு – சிஷ்ய பரம்பரை, இந்த விஞ்ஞான உலகிலும் அழிந்து போய்விடவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம், இந்த நூலின் ஆசிரியரான ஜஸ்டின் ஓ பிரையனும், அவரது குருவான சுவாமி ராமாவும். சுவாமி ராமா, வட இந்தியாவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே, ‘பெங்காலி பாபா’ என்று அழைக்கப்பட்ட இமயத்து...