ராமாயணத்தில் உள்ள ரசனை மிகுந்த காட்சிகளை தனித்தனியே விளக்கியுள்ள நுால். துவக்கத்தில் அயோத்தி நகரத்தின் பெருமைகள், அரசன்- – மந்திரிக்கு இருக்க வேண்டிய பிணைப்பு குறித்த செய்திகள் உள்ளன. ராமர் பிறப்பு, சீதா திருமணம் பற்றி தனி தலைப்பில் கூறப்பட்டுள்ளது. ராமருக்கு முடி சூட்டும் நேரத்தில் கைகேயி வரத்து...