பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால், அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வு தோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள்.புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க, 51 சக்தி...