"சேயோன் மேய மைவரை உலகமும் என்று தொல்காப்பியத்தில் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் குறிக்கப்படும் முருகனுக்கு, கடம்பன், கந்தன், குமரன், செவ்வேள், நெடுவேள், வேலன் என ஏராளமான பெயர்கள் உண்டு. அத்தகைய ஆறுமுகக் கடவுளின் சிறப்பை நாட்டுப்புறப் பாடல்கள், சிந்து இலக்கியங்கள், பழமொழிகள் போன்றவை எவ்விதம்...