உலகம் போற்றும் விழுமிய நுால் களுள் தலையாயது திருக்குறள். ‘தண்டமிழின் மேலாம் தரம்’ என்று அறிஞர்களால் போற்றிப் புகழப்படும் திருக்குறளை, பெரும்புலவோர் எனக் கருதத்தகும் ஆசிரியர்கள் பலரும் தங்கள் நுாலில் எடுத்து ஆண்டிருக்கிறார்கள். தருமர், மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர் உள்ளிட்ட பழைய உரைக்காரர்கள்...