/ கதைகள் / ஆயிரத்தொரு அராபிய இரவுகள்
ஆயிரத்தொரு அராபிய இரவுகள்
அராபிய அரசனின் துயரத்தைப் போக்க பெண்கள் கூறிய இனிய கதைகளின் தொகுப்பு நுால். நேர்மை, உண்மை, உதவுதல் போன்ற நல்ல பண்புகள் ஜனரஞ்சகமாக உணர்த்தப்பட்டுள்ளன. கடலில் பூதத்தின் காவலில் இருந்த பெண் மாயமாகத் தோன்றி, காவலை எல்லாம் மீறி பெண்கள் செய்யும் சாகசங்களை மையமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணை காலையில் திருமணம் செய்பவன், இரவில் அவளை வெட்டி விடுவான். ஐந்து ஆண்டுகள் இப்படியே நடந்தன. இந்த கதையை சொல்லி, மன்னனின் மனநிலையை மாற்றுவதாக அமைந்துள்ளது. கதை கேட்பதில் ஆர்வம் அதிகம் உடையவர், மற்ற எதையும் மறந்து விடுவர் என சுட்டிக்காட்டுகிறது. அறிவு, ஆற்றலை வளர்க்கும் காதல், சாகசம் நிறைந்த கதைகளின் தொகுப்பு நுால். – முனைவர் மா.கி.ரமணன்




