/ ஆன்மிகம் / பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள்
பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள்
சிவபெருமானின் பெருமைகள், மகிமைகளை பேசும் நுால். ஜோதிர்லிங்கங்களின் இருப்பிடம் மற்றும் பெருமையை புராண வரலாற்றுடன் விளக்கிக் கூறுகிறது. ஜோதிர்லிங்கத்தை வழிபட்டால் கிடைக்கும் பலனையும் தருகிறது. தேசிய ஒருமைப்பாட்டை போற்றும் விதமாக அமைந்துள்ளது. சிவலிங்கத்தில் பிரம்மம், விஷ்ணு, ருத்ரன் என்ற தெய்வீக அம்சங்களை சொல்கிறது. இறைவன் பஞ்ச பூத வடிவாக உள்ளவன். மனித உடலிலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. திருமாலும், பிரமனும் அடி முடி தேடிய வரலாறு விளக்கப்பட்டுள்ளது. காசிக்கு நிகரான தலங்கள் பற்றிய குறிப்புகளை தருகிறது.ஜோதிர்லிங்கம் பற்றிய விரிவான தகவல்களை வரலாற்றுப் பின்னணியுடன் தரும் நுால். – புலவர் ரா.நாராயணன்