/ ஆன்மிகம் / 51 சக்தி பீடங்களை அறிந்துகொள்வோம்
51 சக்தி பீடங்களை அறிந்துகொள்வோம்
சக்தி பீடங்கள் பற்றிய விபரத்தை தரும் நுால். அம்மன் பெயர்களையும், வீற்றிருக்கும் தலங்களையும் குறிப்பிடுகிறது.தட்சனின் மகள், தீயால் இரையானாள். சிவன் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடினார். ஆட்டத்தை அடக்க நினைத்த திருமால் சக்கரத்தை ஏவினார். அதனால், தாட்சாயினியின் உடல் பல துண்டுகளாக சிதறி விழுந்தன. அந்த இடங்கள் தான், 51 சக்தி பீடங்கள். தமிழகத்தில் காஞ்சி, திருவானைக்காவல், மதுரை, குற்றாலம், திருவாரூர், கன்னியாகுமரி, திருமுல்லைவாயில் ஆகிய சக்தி பீடங்கள் உள்ளன. ஸ்ரீ சக்கரம் உள்ள 12 தலங்களையும் விளக்கியுள்ளது. அம்பிகையின் தொழில்களையும் விளக்குகிறது. சக்தி பீடங்களை அறிய உதவும் நுால். – புலவர் இரா.நாராயணன்