/ கதைகள் / காலத்தின் சுழற்சியில் பிணைந்த நட்பு!

₹ 120

மனித மனங்களை படம் பிடிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து ஏழை தாய், மருமகளுக்கு புரிதல் ஏற்படுத்தும் முயற்சியை, ‘புரியாதோர் உலகம் செய்வோம்’ கதை அக்கறையுடன் சொல்கிறது. கொண்டைக்காரி கிரிஜா தலைமுடியை திடீரென மொட்டை போட்டதால், ஊரே கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. மொட்டை போடும் நிலைக்கு தள்ளப்பட்டதை ‘உறவுகள்’ நாவல் விவரிக்கிறது. குடும்பத்தில் மூத்த மகனுக்கு இருக்கும் பொறுப்பும், ஒரு முஸ்லிம் பெண் குடும்பத்தில் வருவதை எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டதை, ‘அவள் பெயர் தீபா’ கதை நல்லிணக்கத்துடன் பேசுகிறது. முதியோர் ஆறுதல், ஆதரவுடன் இருப்பதையும் உணர்வுபூர்வமாக கூறும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை