/ கட்டுரைகள் / ஒரு கொடி ஒரு கோட்டை ஒரு கொத்தளம்
ஒரு கொடி ஒரு கோட்டை ஒரு கொத்தளம்
சமூக கட்டமைப்பு, நிகழ்வுகளை மையமாக கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆண், பெண் பார்வையை புரிய வைக்கிறது. விழாக்களும், விருதுகளும் நல்ல படைப்புகளை தேர்வு செய்யுமா என, ஏற்பாட்டாளர்களை கேட்கிறது. எழுத்து, மேடைப்பேச்சு கலையில் உள்ள சவால்களை விவரிக்கிறது. ஒரு கலையை கவனம் சிதறாமல் பார்க்க வைக்கும் நுட்பத்தை கூறுகிறது.ஒரு செய்தி, கதையாகவும், கவிதையாகவும் மாறும் சூழலை குறிப்பிட்டு கற்பனைக்குள் இழுத்து செல்கிறது. முப்பது வயதில் விதவைகள் இருக்கலாம்; முதிர்கன்னிகள் இருப்பது எதனால் என்ற கவலையை வெளிப்படுத்துகிறது. சங்ககால உரையாடல்கள் எப்படி இருந்தன என்பதையும் அறியத்தரும் நுால்.– -டி.எஸ்.ராயன்