/ உளவியல் / ஆளை அசத்தும் ஆளுமை!
ஆளை அசத்தும் ஆளுமை!
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2 (பக்கம் 272) நமது ஆசைகள், அச்சங்கள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என, அனைத்திற்கும் காரணமாக இருப்பது நமது ஆளுமையே. ஒருவரது வெற்றி, தோல்வியை ஆளுமை எப்படி நிர்ணயிக்கிறது என்பது குறித்து, உளவியல் ரீதியாக, பல்வேறு விளக்கங்களுடன் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. நமது உடல், உடை, அறிவு, சமூகச் சூழல் போன்றவற்றிற்கு, ஆளுமையை நிர்ணயிப்பதில் உள்ள முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக நமது பலம் என்ன, பலவீனம் என்ன, அவற்றை எப்படி கூட்டுவது, குறைப்பது என்பது குறித்து இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது