/ கவிதைகள் / ஆலாபனை

₹ 150

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதை தொகுப்பு நுால். ஒப்புதல் வாக்குமூலம், விளக்குகள், கனவு, போட்டி, பவுர்ணமி பிறை, அலங்காரம், தவறான உறவு, பற்று வரவு என, 42 தலைப்புகளில் புனைந்த கவிதைகள் தொகுப்பாக மலர்ந்துள்ளது. ஒவ்வொரு கவிதையும், ‘நீ எங்கள் கண்ணாக இருந்தாய், நாம் உன் கண்ணீராக இருந்தோம்’ என நேராக உரைப்பது போல் அமைந்துள்ளன. வாழ்வின் நிதர்சனங்களை சுட்டிக்காட்டி தன்னுணர்வு ஊட்டுகின்றன. மாதிரி என்ற தலைப்பில், ‘உன் சுயம் செத்துப்போகிறது; பிறகு நீயே பாடையாகி உன் பிணத்தை சுமந்து திரிகிறாய்’ என அடிமை வாழ்வின் பொருளை தோலுரித்து காட்டுகிறது. எளிய சொற்களால், உறங்கி கிடக்கும் மனதுக்கு சுயதரிசனத்தை காட்டுகிறது. விழிப்புணர்வு ஊட்டும் வகையிலான கவிதைகளின் தொகுப்பு நுால். – ஒளி


முக்கிய வீடியோ