/ ஆன்மிகம் / அபயாம்பிகை சதகம்
அபயாம்பிகை சதகம்
மீனாட்சி சுந்தரம் மோகன், 18, 11வது தெரு, நந்தனம் விரிவு, சென்னை-600 025. (பக்கம்: 156).சதகம் என்பது 100 பாடல்களைக் கொண்ட ஒரு சிறு நூல். ஒவ்வொரு பாடலின் இறுதிப் பகுதி ஒரே தொடராய் இருக்க வேண்டும். இதற்கு "மகுடம் என்று பெயர். "மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே என்று பொதுவாக வழங்கப்படும் மயிலாடுதுறையில் அண்டியவருக்கு அபயம் தரும் அபயாம்பிகையாய் விளங்கும் அன்னை மீது பாடப்பட்டிருக்கும் இச்சதகம் ஒரு அருள் நூல். ஆசிரியர் வெறும் பதப் பொருளோடு நின்று விடாமல் விளக்க உரையாகவும், மேற்கோளாகவும் ஆங்காங்கே அருளாளர்களின் அருட்பாடல்களை விரித்துரைத்தும், சித்தாந்த நுண்பொருள் கருத்துக்களையும் கோட்டிட்டுக் காட்டியுள்ளார். சக்தி வழிபாட்டு அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.