ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்
ஆதிசங்கரர் பாடிய அத்வைத சாரமான பஜகோவிந்தத்துக்கு சீடர்கள் இயற்றிய விளக்கங்களுடன் விரிவான தெளிவுரையாக உள்ள நுால்.மரண காலத்தில் எப்படி தெய்வத்தை நினைக்க வேண்டும் என்ற உபதேசம் பதிவாகியுள்ளது. பக்தி, ஞானம், வைராக்கியம் கொண்டு புலன் இன்பங்களை விட்டு, பற்று இல்லாது வாழ்ந்தால் பரமன் அருள் பெறலாம் என்கிறது, ‘பஜகோவிந்தம்’ எனத் துவங்கும் முதல் பாடல். கோவிந்தன் என்ற சொல்லின் விளக்கமும், மரண கால தெய்வச் சிந்தனையும் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.சுய சம்பாத்தியமே உத்தமம்! பெற்றோர் சொத்தால் வருவது மத்திமம்! சகோதரர் சம்பாத்தியத்தில் வாழ்வது கேவலம்! மனைவி சம்பாத்தியத்தில் வாழ்வது கேவலத்திலும் கேவலம். இப்படி படிப்பவர் மனதை பிடித்துக் கொள்ளும் இடங்கள் பல உள்ளன.கீதை பாராயணமும், கங்கைப் புனித நீரும், கோவிந்தன் நாமமும் காலனை விரட்டும் என்கிறது. விளக்கமும், மேற்கோளும் ஆதிசங்கரரை கண்முன் நிறுத்துகிறது.– முனைவர் மா.கி.ரமணன்