/ ஆன்மிகம் / அகத்தியர் அடிச்சுவடுகள்

₹ 250

அகத்தியர் பற்றிய ஆய்வு நுால். மன நோய்கள் பற்றி விரிவாக கூறியுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. அகத்தியர் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளதாக சுட்டப்படுகிறது. 37 அகத்தியர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தலைச் சங்கத்தில் எழுந்த அகத்தியம் முதலாக இலக்கியம், புராணங்களில் காணப்படும் குறிப்புகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. அகத்தியத்தின் விரிவு கண்டு சுருக்கமாக தொல்காப்பியம் படைக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவாக, திருவனந்தபுரத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மிக அன்பர்களுக்கு பயனுள்ள நுால்.– புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ