அகில ஒளி அய்யா வைகுண்டர் – நாவல்
அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு, நாவல் வடிவில் படைக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரையும், மன்னர் சுவாதித் திருநாளையும் இணைத்து வரும் நிகழ்வுகளும் உள்ளன. சிறுவராக முத்துக்குட்டி, அய்யா வைகுண்டரான கதையும், மக்கள் முன் நடத்திய விந்தைகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களும் எழுச்சி குன்றாமல் தரப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களால் அவதாரமாகப் பார்க்கப்பட்ட அய்யா வைகுண்டர் தன்னைத்தானே உயர்த்தும் கண்ணாடி வழிபாட்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னராட்சி அவலம், சூழ்ச்சி, தந்திரம், அநீதிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் வரலாறு, கன்னியாகுமரி வரலாறுடன் அன்றைய போர்கள் பற்றிம் தகவல்களையும் காண முடிகிறது. வைகுண்டரின் இறைமையையும், போராளிக் குணத்தையும், தலைமைப் பண்பையும் அறிந்து கொள்ள உதவும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு