/ ஆன்மிகம் / அகிலாண்டேசுவரி பதிகம்
அகிலாண்டேசுவரி பதிகம்
கோவை-37. (பக்கம்: 99) நன்னூல் என்னும் இலக்கண நூலுக்கு, "விருத்தியுரை என்னும் அரிய உரையை எழுதிய மாதவச் சிவஞான முனிவர் எழுதிய நூல் அகிலாண்டேசுவரி பதிகம். கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையினால், புனைவதையே பதிகத்திற்கு மரபாகக் கொண்டுள்ளனர்.திருநெல்வேலியில் நெல்லையப்பரை வழிபட்ட சிவஞான முனிவர், செப்பறைப்பதி, இராசவல்லிபுரம் அக்னீசுவரரை வழிபட்டு, அம்மன் அகிலாண்டேசுவரியை வணங்கினார். அந்த அம்மன் மீது பாடப்பெற்றதே இந்நூல். இதைத் தத்துவ நூல் என்றும், தோத்திர நூல் என்றும் கூறலாம். செய்யுள்களுக்கு உரையாசிரியர் பதவுரை, கருத்துரை, விளக்கவுரை என்ற முறையில் தெளிவாக விளக்கம் கூறியுள்ளார். பக்தியுடன் பலமுறையும் படித்துப் பயன்பெற வேண்டிய நல்ல நூல்.