/ கதைகள் / ஆள்வினையுடைமை

₹ 70

திருக்குறள் ஆள்வினையுடைமை அதிகார கருத்தில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்களுக்கு அறிவுரைக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. பகீரதனின் முயற்சியால் கங்கை பூவுலகுக்கு வந்த கதை சுவையுடன் உள்ளது. இடையறாத தொடர் முயற்சியால் தோண்டிய கிணற்றில் நீர் பெருக்கெடுத்தது பற்றிய கதை வித்தியாசமானது. மக்கள் துன்பம் தீர்ப்பதே இறைவன் தொண்டு என புத்தர் கதையில் கூறப்பட்டுள்ளது. தந்தை சேர்த்த செல்வம் அழிந்துவிட, வறுமையில் வாடிய சிந்துபாத் திரைகடல் ஓடி திரவியம் தேடியதை கூறுகிறது. இறந்த யானையை பல நாட்கள் தின்ற நரி பற்றிய கதை சுவாரசியமாக உள்ளது. சிறுவர், சிறுமியர் ஆளுமையை வளர்க்கும் வகையில் குறள் நெறி விதைக்கும் நுால். -– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை