/ கதைகள் / அம்மா எனும் மனுஷி
அம்மா எனும் மனுஷி
அன்பு, மனிதநேயம், நேர்மை, சமூக அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் விதவைத் தாயின் ஏக்கத்தை ‘விழுதுகள்’ கதை கூறுகிறது. ரயிலில் படுக்கை மாறி படுத்தால் ஏற்படும் சிரமத்தை, ‘அவஸ்தை’ கதை பகிர்கிறது.திடீரென சொந்த கார் வாங்கி நீண்ட துாரம் பயணிக்கும் அனுபவத்தை, ‘பயணம்’ கதை பேசுகிறது. புறநகரில் வீடு வாங்கி, தொந்தரவு சமாளிப்பதை கூறும் அனுபவம் பலரை நினைவூட்டும். இலக்கிய கூட்டம் சென்று, பஸ்சில் பயணித்து வீடு செல்லும் வலியை, இலக்கியவாதி வழியாக உணர்த்துகிறது. சந்தித்த, பார்த்த நிகழ்வுகளை, அதனால் எழும் கேள்விகளின் அடிப்படையில் கதையாக படைத்துள்ளார். எங்கிருந்தாலும் அனைவரும் மனிதர்கள் என ஒவ்வொரு கதையும் உணர்த்துகிறது.– டி.எஸ்.ராயன்