/ கதைகள் / அநாதை மாதிரிதானே...?
அநாதை மாதிரிதானே...?
மனிதநேய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வருவாய் இல்லாத ஆட்டோ டிரைவர், வயதான பெண்ணுக்கு செய்த உதவியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கதை மனிதாபிமானம் நிறைந்தது. ஒரு நாயை பிள்ளைக்கு மேலாக நேசித்து வளர்த்தவர், அதனால் கடிபட்டு அவதிப்பட நேர்ந்த விபரீதத்தை, படைத்தவனிடம் பேரம் பேசக்கூடாது என தத்துவமாக சொல்லப்பட்டுள்ளது. சாந்தியும், சமாதானமும் உண்டாக வாழ்த்துவதால் ஏற்படும் நன்மை ஒரு கதையில் கூறப்பட்டுள்ளது. கணவன் ஒரு நாடு, மனைவி ஒரு நாடு என்று இருந்தால் வசந்தம் ஏற்படாது என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக, ‘பிறையை தேடும் முழுமதி’ சிறுகதை தெரிவிக்கிறது. – சீத்தலைச் சாத்தன்




