/ கதைகள் / அன்புள்ள அம்மாவுக்கு
அன்புள்ள அம்மாவுக்கு
இதழ்களில் பல சூழல்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிமையாக விறுவிறுப்பு நிறைந்த நடையில் உள்ளது. சமூக நிலையை சித்தரிக்கிறது.இந்த தொகுப்பு, 15 சிறுகதைகளை உடையது. ஒவ்வொன்றிலும் வரும் பாத்திரங்கள் அன்பை, உயர்ந்த குணநலன்களை, நம்பிக்கையுள்ள எதிர்பார்ப்புகளை தாங்கி உள்ளன. வெறுப்புக்குரியவற்றை மாய லோகத்தில் நிறுத்துகிறது. நடப்பு உலகில் நிலவும் பிரச்னையை கனிந்த குரலில், நடத்தையை குலைக்காத வண்ணம் எடுத்துரைக்கிறது.தடுமாற்றம் அற்ற தேடல், நம்பிக்கையாக மலர்ந்து மகிழ்ச்சி தருவது கதாபாத்திரங்களின் நடத்தையில் முழுதுமாக காணமுடிகிறது. அர்த்தமுள்ள புதிய சொற்களால் வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கிறது. திருப்பம் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.– மதி